திருப்பாடல்கள் 140

முந்திய அடுத்த
1⁽ஆண்டவரே! தீயோரிடமிருந்து␢ என்னை விடுவியும்;␢ வன்செயல் செய்வோரிடமிருந்து␢ என்னைப் பாதுகாத்தருளும்.⁾ 2⁽அவர்கள் தம் மனத்தில்␢ தீயனவற்றை திட்டமிடுகின்றனர்;␢ நாள்தோறும் சச்சரவுகளைக்␢ கிளப்பி விடுகின்றனர்.⁾ 3⁽அவர்கள் பாம்பெனத் தம் நாவைக்␢ கூர்மையாக்கிக்கொள்கின்றனர்;␢ அவர்களது உதட்டில் உள்ளது␢ விரியன் பாம்பின் நஞ்சே! (சேலா)⁾ 4⁽ஆண்டவரே! தீயோரின் கையினின்று␢ என்னைக் காத்தருளும்;␢ கொடுமை செய்வோரிடமிருந்து␢ என்னைப் பாதுகாத்தருளும்;␢ அவர்கள் என் காலை␢ வாரிவிடப் பார்க்கின்றார்கள்.⁾ 5⁽செருக்குற்றோர் எனக்கெனக்␢ கண்ணியை மறைவாக வைக்கின்றனர்;␢ தம் கயிறுகளால்␢ எனக்கு சுருக்கு வைக்கின்றனர்; (சேலா)⁾ 6⁽நானோ ஆண்டவரை நோக்கி␢ இவ்வாறு வேண்டினேன்;␢ நீரே என் இறைவன்!␢ ஆண்டவரே! உம் இரக்கத்திற்காக␢ நான் எழுப்பும் குரலுக்குச் செவிசாயும்.⁾ 7⁽என் தலைவராகிய ஆண்டவரே!␢ எனக்கு விடுதலை வழங்கும் வல்லவரே!␢ போர் நடந்த நாளில் என் தலையை␢ மறைத்துக் காத்தீர்!⁾ 8⁽ஆண்டவரே! தீயோரின் விருப்பங்களை␢ நிறைவேற்றாதேயும்; அவர்களின்␢ சூழ்ச்சிகளை வெற்றி பெறவிடாதேயும்.␢ இல்லையெனில், அவர்கள் ஆணவம்␢ கொள்வார்கள். (சேலா)⁾ 9⁽என்னைச் சூழ்பவர்கள் செருக்குடன்␢ நடக்கின்றார்கள்;␢ அவர்கள் செய்வதாகப் பேசும் தீமை␢ அவர்கள்மேலே விழுவதாக!⁾ 10⁽நெருப்புத் தழல்␢ அவர்கள்மேல் விழுவதாக!␢ மீளவும் எழாதபடி படுகுழியில்␢ தள்ளப்படுவார்களாக!⁾ 11⁽புறங்கூறும் நாவுடையோர் உலகில்␢ நிலைத்து வாழாதிருப்பராக!␢ வன்செயல் செய்வாரைத்␢ தீமை விரட்டி வேட்டையாடுவதாக!⁾ 12⁽ஏழைகளின் நீதிக்காக␢ ஆண்டவர் வழக்காடுவார் எனவும்␢ எளியவர்களுக்கு நீதி வழங்குவார்␢ எனவும் அறிவேன்.⁾ 13⁽மெய்யாகவே, நீதிமான்கள்␢ உமது பெயருக்கு␢ நன்றி செலுத்துவார்கள்;␢ நேர்மையுள்ளோர் உம் திருமுன் வாழ்வர்.⁾