திருப்பாடல்கள் 9

முந்திய அடுத்த
1⁽ஆண்டவரே, என் முழு இதயத்தாலும்␢ உம்மைப் புகழ்வேன்; வியத்தகு உம்␢ செயல்களையெல்லாம் எடுத்துரைப்பேன்.⁾ 2⁽உம்மை முன்னிட்டு மகிழ்ந்து களிகூர்வேன்;␢ உன்னதரே, உமது பெயரைப்␢ போற்றிப் பாடுவேன்.⁾ 3⁽என் எதிரிகள் பின்னிட்டுத் திரும்புவார்கள்;␢ உமது முன்னிலையில்␢ இடறிவிழுந்து அழிவார்கள்.⁾ 4⁽நீர் நீதியுள்ள நடுவராய்␢ அரியணையில் வீற்றிருக்கின்றீர்;␢ என் வழக்கில் எனக்கு நீதி வழங்கினீர்.⁾ 5⁽வேற்றினத்தாரைக் கண்டித்தீர்;␢ பொல்லாரை அழித்தீர்;␢ அவர்களது பெயர் இனி இராதபடி␢ அடியோடு ஒழித்துவிட்டீர்.⁾ 6⁽எதிரிகள் ஒழிந்தார்கள்; என்றும்␢ தலையெடுக்கமுடியாமல் அழிந்தார்கள்.⁾ 7⁽அவர்களின் நகர்களை␢ நீர் தரைமட்டம் ஆக்கினீர்;␢ அவர்களைப் பற்றிய நினைவு␢ அற்றுப் போயிற்று.␢ ஆண்டவர் அரியணையில்␢ என்றென்றும் வீற்றிருக்கின்றார்;␢ நீதி வழங்குவதற்கென்று␢ அவர் தம் அரியணையை␢ அமைத்திருக்கின்றார்.⁾ 8⁽உலகிற்கு அவர்␢ நீதியான தீர்ப்பு வழங்குவார்;␢ மக்களினத்தார்க்கு␢ நேர்மையான தீர்ப்புக் கூறுவார்.⁾ 9⁽ஒடுக்கப்படுவோருக்கு␢ ஆண்டவரே அடைக்கலம்;␢ நெருக்கடியான வேளைகளில்␢ புகலிடம் அவரே.⁾ 10⁽உமது பெயரை அறிந்தோர்␢ உம்மில் நம்பிக்கை கொள்வர்;␢ ஆண்டவரே, உம்மை நாடி வருவோரை␢ நீர் கைவிடுவதில்லை.⁾ 11⁽சீயோனில் தங்கியிருக்கும்␢ ஆண்டவரைப் புகழ்ந்து பாடுங்கள்;␢ அவருடைய செயல்களை␢ மக்களினத்தாரிடையே அறிவியுங்கள்;⁾ 12⁽ஏனெனில், இரத்தப்பழி வாங்கும் அவர்␢ எளியோரை நினைவில் கொள்கின்றார்;␢ அவர்களின் கதறலை␢ அவர் கேட்க மறவார்.⁾ 13⁽ஆண்டவரே, என்மீது இரக்கமாயிரும்;␢ என்னைப் பகைப்போரால்␢ எனக்கு வரும் துன்பத்தைப் பாரும்;␢ சாவின் வாயினின்று என்னை விடுவியும்.⁾ 14⁽அப்பொழுது, மகள் சீயோனின் வாயில்களில்␢ உம் புகழ் அனைத்தையும் பாடுவேன்;␢ நீர் அளிக்கும் விடுதலைகுறித்து␢ அகமகிழ்வேன்.⁾ 15⁽வேற்றினத்தார் வெட்டின குழியில்␢ அவர்களே விழுந்தனர்;␢ அவர்கள் மறைத்து வைத்திருந்த வலையில்␢ அவர்கள் கால்களே சிக்கிக்கொண்டன.⁾ 16⁽ஆண்டவர் நீதியை நிலைநாட்டுவதன் மூலம்␢ தம்மை வெளிப்படுத்தியுள்ளார்;␢ பொல்லார் செய்த செயலில்␢ அவர்களே சிக்கிக்கொண்டனர். (இடை இசை: சேலா)⁾ 17⁽பொல்லார் பாதாளத்திற்கே செல்வர்;␢ கடவுளை மறந்திருக்கும்␢ வேற்றினத்தார் யாவரும் அங்கே செல்வர்.⁾ 18⁽மாறாக, வறியவர் என்றுமே␢ மறக்கப்படுவதில்லை;␢ எளியோரின் நம்பிக்கை␢ ஒருபோதும் வீண்போகாது.⁾ 19⁽ஆண்டவரே, எழுந்தருளும்;␢ மனிதரின் கை ஓங்க விடாதேயும்;␢ வேற்றினத்தார் உமது முன்னிலையில்␢ தீர்ப்புப் பெறுவார்களாக!⁾ 20⁽ஆண்டவரே, அவர்களைத்␢ திகிலடையச் செய்யும்;␢ தாம் வெறும் மனிதரே என்பதை␢ வேற்றினத்தார் உணர்வார்களாக! (சேலா)⁾