திருப்பாடல்கள் 115

முந்திய அடுத்த
1⁽எங்களுக்கன்று, ஆண்டவரே!␢ எங்களுக்கன்று;␢ மாட்சியை உம் பெயருக்கே␢ உரித்தாக்கும்;␢ உம் பேரன்பையும்␢ உண்மையையும் முன்னிட்டு␢ அதை உமக்கே உரியதாக்கும்.⁾ 2⁽‘அவர்களுடைய கடவுள் எங்கே’ எனப்␢ பிற இனத்தார் வினவுவது ஏன்?⁾ 3⁽நம் கடவுளோ விண்ணுலகில் உள்ளார்;␢ தம் திருவுளப்படி␢ அனைத்தையும் செய்கின்றார்.⁾ 4⁽அவர்களுடைய தெய்வச்சிலைகள்␢ வெறும் வெள்ளியும் பொன்னுமே,␢ வெறும் மனிதக் கைவேலையே!⁾ 5⁽அவற்றுக்கு வாய்கள் உண்டு;␢ ஆனால் அவை பேசுவதில்லை;␢ கண்கள் உண்டு;␢ ஆனால் அவை பார்ப்பதில்லை;⁾ 6⁽செவிகள் உண்டு;␢ ஆனால் அவை கேட்பதில்லை;␢ மூக்குகள் உண்டு;␢ ஆனால் அவை முகர்வதில்லை.⁾ 7⁽கைகள் உண்டு;␢ ஆனால் அவை தொட்டுணர்வதில்லை;␢ கால்கள் உண்டு;␢ ஆனால் அவை நடப்பதில்லை;␢ தொண்டைகள் உண்டு;␢ ஆனால் அவை குரல் எழுப்புவதில்லை.⁾ 8⁽அவற்றைச் செய்கின்றோரும்␢ அவற்றில் நம்பிக்கை கொள்ளும்␢ அனைவரும் அவற்றைப்போல் ஆவர்.⁾ 9⁽இஸ்ரயேலரே! ஆண்டவர்மீது␢ நம்பிக்கைக் கொள்ளுங்கள்;␢ அவரே உங்களுக்குத் துணையும் கேடயமும் ஆவார்.⁾ 10⁽ஆரோனின் குலத்தாரே!␢ ஆண்டவர்மீது␢ நம்பிக்கைக் கொள்ளுங்கள்;␢ அவரே உங்களுக்குத்␢ துணையும் கேடயமும் ஆவார்.⁾ 11⁽ஆண்டவருக்கு அஞ்சி நடப்போரே!␢ அவர்மீது நம்பிக்கை கொள்ளுங்கள்;␢ அவரே உங்களுக்குத்␢ துணையும் கேடயமும் ஆவார்.⁾ 12⁽ஆண்டவர்␢ நம்மை நினைவு கூர்ந்துள்ளார்;␢ நமக்குத் தம் ஆசியை அளிப்பார்.␢ இஸ்ரயேல் குடும்பத்தாருக்கு␢ ஆசி வழங்குவார்;␢ ஆரோனின் குடும்பத்தாருக்கு␢ ஆசி வழங்குவார்;⁾ 13⁽தமக்கு அஞ்சிநடப்போர்க்கு␢ ஆண்டவர் ஆசி வழங்குவார்;␢ சிறியோர்க்கும் பெரியோர்க்கும்␢ ஆசி வழங்குவார்.⁾ 14⁽ஆண்டவர் உங்கள் இனத்தைப்␢ பெருகச் செய்வார்;␢ உங்களையும் உங்கள் பிள்ளைகளையும்␢ வளரச் செய்வார்.⁾ 15⁽நீங்கள் ஆண்டவரிடமிருந்து␢ ஆசி பெறுவீர்களாக!␢ விண்ணையும் மண்ணையும்␢ உருவாக்கியவர் அவரே.⁾ 16⁽விண்ணகமோ ஆண்டவருக்கு உரியது;␢ மண்ணகத்தையோ␢ அவர் மானிடர்க்கு வழங்கியுள்ளார்.⁾ 17⁽இறந்தோர் ஆண்டவரைப் புகழ்வதில்லை;␢ மௌன உலகிற்குள் இறங்குவோர்␢ எவருமே அவரைப் புகழ்வதில்லை;⁾ 18⁽நாமோ ஆண்டவரை வாழ்த்துகின்றோம்;␢ இப்பொழுதும் எப்பொழுதும்␢ வாழ்த்துகின்றோம்.⁾