1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
46
47
48
49
50
51
52
53
54
55
56
57
58
59
60
61
62
63
64
65
66
67
68
69
70
71
72
73
74
75
76
77
78
79
80
81
82
83
84
85
86
87
88
89
90
91
92
93
94
95
96
97
98
99
100
101
102
103
104
105
106
107
108
109
110
111
112
113
114
115
116
117
118
119
120
121
122
123
124
125
126
127
128
129
130
131
132
133
134
135
136
137
138
139
140
141
142
143
144
145
146
147
148
149
150
1⁽ஆண்டவரே, என் வழக்கின்␢ நியாயத்தைக் கேட்டருளும்;␢ என் வேண்டுதலை உற்றுக் கேளும்;␢ வஞ்சகமற்ற உதட்டினின்று எழும்␢ என் மன்றாட்டுக்குச் செவிசாய்த்தருளும்.⁾
2⁽உம் முன்னிலையினின்று␢ எனக்கு நீதி கிடைக்கட்டும்;␢ உம் கண்கள் நேரியன காணட்டும்.⁾
3⁽என் உள்ளத்தை ஆய்ந்தறியும்;␢ இரவு நேரத்தில் எனைச் சந்தித்திடும்;␢ என்னைப் புடமிட்டுப் பார்த்திடும்;␢ தீமை எதையும் என்னிடம் காணமாட்டீர்;␢ என் வாய் பிழை செய்யக்கூடாதென␢ உறுதி கொண்டேன்.⁾
4⁽பிற மானிடர் செய்வது போல் அல்லாமல்,␢ நீர் உரைத்த வாக்கிற்கிணங்க,␢ வன்முறையாளரின் வழிகளை விட்டு␢ விலகியுள்ளேன்.⁾
5⁽என் நடத்தை␢ உம் பாதைகளில் அமைந்துள்ளது;␢ என் காலடிகள்␢ உம் வழியினின்று பிறழவில்லை.⁾
6⁽இறைவா, நான் உம்மை நோக்கிக்␢ கூப்பிடுகின்றேன்; ஏனெனில், § நீர் எனக்குப் பதில் அளிப்பீர்.␢ என் பக்கம் உம் செவியைத் திருப்பியருளும்;␢ என் விண்ணப்பத்திற்குச் § செவிசாய்த்தருளும்.⁾
7⁽உமது வியத்தகு பேரன்பைக்␢ காண்பித்தருளும்;␢ உம்மிடம் அடைக்கலம் புகுவோரை␢ அவர்களுடைய எதிரிகளிடமிருந்து␢ உமது வலக்கரத்தால் விடுவிப்பவர் நீரே!⁾
8⁽உமது கண்ணின் மணியென␢ என்னைக் காத்தருளும்;␢ உம்முடைய சிறகுகளின் நிழலில்␢ என்னை மூடிக்கொள்ளும்.⁾
9⁽என்னை ஒழிக்கத் தேடும்␢ பொல்லாரிடமிருந்தும்␢ என்னைச் சூழ்ந்து கொண்ட␢ எதிரிகளிடமிருந்தும்␢ என்னை மறைத்துக் கொள்ளும்.⁾
10⁽அவர்கள் ஈவு இரக்கமற்ற கல்நெஞ்சர்கள்;␢ தங்கள் வாயினால்␢ இறுமாப்புடன் பேசுபவர்கள்.⁾
11⁽அவர்கள் என்னைப் பின்தொடர்கின்றனர்;␢ இதோ! என்னை § வளைத்துக் கொண்டனர்;␢ அவர்கள் என்னைத் தரையில் வீழ்த்துவதற்கு,␢ வைத்த கண் வாங்காது § காத்திருக்கின்றனர்.⁾
12⁽பீறிப்போடத் துடிக்கும்␢ சிங்கத்திற்கு அவர்கள் ஒப்பாவர்;␢ மறைவிடத்தில் பதுங்கியிருக்கும்␢ இளஞ்சிங்கத்திற்கு நிகராவர்.⁾
13⁽ஆண்டவரே, எழுந்து வாரும்;␢ அவர்களை நேருக்குநேர்␢ எதிர்த்து முறியடியும்;␢ பொல்லாரிடமிருந்து உமது வாளால்␢ என்னைக் காத்தருளும்.⁾
14⁽ஆண்டவரே, மாயும் மனிதரிடமிருந்து –␢ இவ்வுலகமே தங்கள் கதியென␢ வாழ்ந்து மாயும் மனிதரிடமிருந்து –␢ உமது கைவலிமையினால்␢ என்னைக் காப்பாற்றும். அவர்களுக்கென␢ நீர் ஒதுக்கி வைத்துள்ளவற்றால்␢ அவர்கள் வயிற்றை நிரப்பும்;␢ அவர்களின் மைந்தர்␢ வேண்டிய மட்டும் நிறைவு பெறட்டும்;␢ எஞ்சியிருப்பதைத் தங்கள் பிள்ளைகளுக்கு␢ விட்டுச்செல்லட்டும்;⁾
15⁽நானோ நேர்மையில் நிலைத்திருந்து␢ உமது முகம் காண்பேன்;␢ விழித்தெழும்போது,␢ உமது உருவம் கண்டு நிறைவு பெறுவேன்.⁾