1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
46
47
48
49
50
51
52
53
54
55
56
57
58
59
60
61
62
63
64
65
66
67
68
69
70
71
72
73
74
75
76
77
78
79
80
81
82
83
84
85
86
87
88
89
90
91
92
93
94
95
96
97
98
99
100
101
102
103
104
105
106
107
108
109
110
111
112
113
114
115
116
117
118
119
120
121
122
123
124
125
126
127
128
129
130
131
132
133
134
135
136
137
138
139
140
141
142
143
144
145
146
147
148
149
150
1⁽ஆண்டவருக்கு நன்றி␢ செலுத்துங்கள்;␢ ஏனெனில் அவர் நல்லவர்.␢ என்றும் உள்ளது அவரது பேரன்பு.⁾
2⁽தெய்வங்களின் இறைவனுக்கு␢ நன்றி செலுத்துங்கள்;␢ என்றும் உள்ளது அவரது பேரன்பு.⁾
3⁽தலைவர்களின் தலைவருக்கு␢ நன்றி செலுத்துங்கள்;␢ என்றும் உள்ளது அவரது பேரன்பு.⁾
4⁽தாம் ஒருவராய் மாபெரும்␢ அருஞ்செயல்களைப் புரிபவர்க்கு␢ நன்றி செலுத்துங்கள்;␢ என்றும் உள்ளது அவரது பேரன்பு.⁾
5⁽வான்வெளியை␢ மதிநுட்பத்தால் உருவாக்கியவர்க்கு␢ நன்றி செலுத்துங்கள்;␢ என்றும் உள்ளது அவரது பேரன்பு.⁾
6⁽கடல்மீது மண்ணகத்தை விரித்தவர்க்கு␢ நன்றி செலுத்துங்கள்;␢ என்றும் உள்ளது அவரது பேரன்பு.⁾
7⁽பெருஞ்சுடர்களை உருவாக்கியவர்க்கு␢ நன்றி செலுத்துங்கள்;␢ என்றும் உள்ளது அவரது பேரன்பு.⁾
8⁽பகலை ஆள்வதற்கெனக்␢ கதிரவனை உருவாக்கியவர்க்கு␢ நன்றி செலுத்துங்கள்;␢ என்றும் உள்ளது அவரது பேரன்பு.⁾
9⁽இரவை ஆள்வதற்கென␢ நிலாவையும் விண்மீன்களையும்␢ உருவாக்கியவர்க்கு நன்றி செலுத்துங்கள்;␢ என்றும் உள்ளது அவரது பேரன்பு.⁾
10⁽எகிப்தின் தலைப்பேறுகளைக்␢ கொன்றழித்தவர்க்கு␢ நன்றி செலுத்துங்கள்;␢ என்றும் உள்ளது அவரது பேரன்பு.⁾
11⁽அவர்கள் நடுவிலிருந்து இஸ்ரயேலை␢ வெளிக்கொணர்ந்தவர்க்கு␢ நன்றி செலுத்துங்கள்;␢ என்றும் உள்ளது அவரது பேரன்பு.⁾
12⁽தோளின் வலிமையாலும்␢ ஓங்கிய புயத்தாலும் அதைச்␢ செய்தவர்க்கு நன்றி செலுத்துங்கள்;␢ என்றும் உள்ளது அவரது பேரன்பு.⁾
13⁽செங்கடலை இரண்டாகப் பிரித்தவர்க்கு␢ நன்றி செலுத்துங்கள்;␢ என்றும் உள்ளது அவரது பேரன்பு.⁾
14⁽அதன் நடுவே இஸ்ரயேலை␢ நடத்திச் சென்றவர்க்கு␢ நன்றி செலுத்துங்கள்;␢ என்றும் உள்ளது அவரது பேரன்பு.⁾
15⁽பார்வோனையும் அவன் படைகளையும்␢ செங்கடலில் மூழ்கடித்தவர்க்கு␢ நன்றி செலுத்துங்கள்;␢ என்றும் உள்ளது அவரது பேரன்பு.⁾
16⁽பாலை நிலத்தில் தம் மக்களை␢ வழிநடத்தியவர்க்கு␢ நன்றி செலுத்துங்கள்;␢ என்றும் உள்ளது அவரது பேரன்பு.⁾
17⁽மாபெரும் மன்னர்களை வெட்டி␢ வீழ்த்தியவர்க்கு நன்றி செலுத்துங்கள்;␢ என்றும் உள்ளது அவரது பேரன்பு.⁾
18⁽வலிமைமிகு மன்னர்களைக்␢ கொன்றழித்தவர்க்கு␢ நன்றி செலுத்துங்கள்;␢ என்றும் உள்ளது அவரது பேரன்பு.⁾
19⁽எமோரியரின் மன்னன் சீகோனைக்␢ கொன்றழித்தவர்க்கு␢ நன்றி செலுத்துங்கள்;␢ என்றும் உள்ளது அவரது பேரன்பு.⁾
20⁽பாசானின் மன்னன் ஓகைக்␢ கொன்றழித்தவர்க்கு␢ நன்றி செலுத்துங்கள்;␢ என்றும் உள்ளது அவரது பேரன்பு.⁾
21⁽அவர்களது நாட்டைத் தம் மக்களுக்கு␢ உரிமைச் சொத்தாக ஈந்தவர்க்கு␢ நன்றி செலுத்துங்கள்;␢ என்றும் உள்ளது அவரது பேரன்பு.⁾
22⁽அதைத் தம் அடியார்களாகிய␢ இஸ்ரயேலர்க்கு␢ உரிமைச் சொத்தாக ஈந்தவர்க்கு␢ நன்றி செலுத்துங்கள்;␢ என்றும் உள்ளது அவரது பேரன்பு.⁾
23⁽தாழ்வுற்றிருந்த நம்மை நினைவு␢ கூர்ந்தவர்க்கு நன்றி செலுத்துங்கள்;␢ என்றும் உள்ளது அவரது பேரன்பு.⁾
24⁽நம் எதிரிகளினின்று நம்மை␢ விடுவித்தவர்க்கு நன்றி செலுத்துங்கள்;␢ என்றும் உள்ளது அவரது பேரன்பு.⁾
25⁽உடல்கொண்ட அனைத்திற்கும்␢ உணவூட்டுபவர்க்கு␢ நன்றி செலுத்துங்கள்;␢ என்றும் உள்ளது அவரது பேரன்பு.⁾
26⁽விண்ணுலகின் இறைவனுக்கு␢ நன்றி செலுத்துங்கள்;␢ என்றும் உள்ளது அவரது பேரன்பு.⁾