திருப்பாடல்கள் 144

முந்திய அடுத்த
1⁽என் பாறையாகிய ஆண்டவர்␢ போற்றி! போற்றி!␢ போரிட என் கைகளுக்குப்␢ பயிற்சி அளிப்பவர் அவரே!␢ போர்புரிய என் விரல்களைப்␢ பழக்குபவரும் அவரே!⁾ 2⁽என் கற்பாறையும்* கோட்டையும் அவரே!␢ எனக்குப் பாதுகாப்பாளரும்␢ மீட்பரும் அவரே!␢ என் கேடயமும் புகலிடமும் அவரே!␢ மக்களினத்தாரை எனக்குக்␢ கீழ்ப்படுத்துபவர் அவரே!⁾ 3⁽ஆண்டவரே! மனிதரை நீர் கவனிக்க␢ அவர்கள் யார்?␢ மானிடரை நீர் கருத்தில் கொள்ள␢ அவர்கள் யார்?⁾ 4⁽மனிதர் சிறுமூச்சுக்கு ஒப்பானவர்;␢ அவர்களின் வாழ்நாள்கள்␢ மறையும் நிழலுக்கு நிகரானவை.⁾ 5⁽ஆண்டவரே! உம் வான்வெளியை␢ வளைத்து இறங்கிவாரும்;␢ மலைகளைத் தொடும்;␢ அவை புகை கக்கும்.⁾ 6⁽மின்னலை மின்னச் செய்து,␢ அவர்களைச் சிதறடியும்;␢ உம் அம்புகளை எய்து,␢ அவர்களைக் கலங்கடியும்.⁾ 7⁽வானின்று உமது கையை நீட்டி␢ எனக்கு விடுதலை வழங்கும்;␢ பெருவெள்ளம் போல் எழும்␢ வேற்றினத்தார் கையினின்று␢ என்னை விடுவித்தருளும்.⁾ 8⁽அவர்களது வாய் பேசுவது பொய்!␢ அவர்களது வலக்கை␢ வஞ்சமிகு வலக்கை!⁾ 9⁽இறைவா, நான் உமக்குப்␢ புதியதொரு பாடல் பாடுவேன்;␢ பதின் நரம்பு வீணையால்␢ உமக்குப் புகழ் பாடுவேன்.⁾ 10⁽அரசர்களுக்கு வெற்றி அளிப்பவர் நீரே!␢ உம் ஊழியர் தாவீதைக்␢ கொடிய வாளினின்று␢ தப்புவித்தவரும் நீரே!⁾ 11⁽எனக்கு விடுதலை வழங்கும்;␢ வேற்றினத்தார் கையினின்று␢ என்னை விடுவித்தருளும்;␢ அவர்களது வாய் பேசுவது பொய்!␢ அவர்களது வலக்கை வஞ்சமிகு வலக்கை!⁾ 12⁽எம் புதல்வர்கள்␢ இளமையில் செழித்து வளரும்␢ செடிகள்போல் இருப்பார்களாக!␢ எம் புதல்வியர்␢ அரண்மனைக்கு அழகூட்டும்␢ செதுக்கிய சிலைகள்போல்␢ இருப்பார்களாக!⁾ 13⁽எம் களஞ்சியங்கள் நிறைந்திருப்பனவாக!␢ வகைவகையான தானியங்களால்␢ நிறைந்திருப்பனவாக!␢ எங்கள் வயல்களில் ஆடுகள் ஆயிரம்,␢ பல்லாயிரம் மடங்கு பலுகட்டும்!⁾ 14⁽எங்கள் மாடுகள் சுமைசுமப்பனவாக!␢ எவ்விதச் சிதைவோ இழப்போ␢ இல்லாதிருக்கட்டும்!␢ எங்கள் தெருக்களில்␢ அழுகுரல் இல்லாதிருக்கட்டும்.⁾ 15⁽இவற்றை உண்மையாகவே அடையும்␢ மக்கள் பேறுபெற்றோர்!␢ ஆண்டவரைத் தம் கடவுளாகக் கொண்ட␢ மக்கள் பேறுபெற்றோர்.⁾