திருப்பாடல்கள் 34

முந்திய அடுத்த
1⁽ஆண்டவரை நான்␢ எக்காலமும் போற்றுவேன்;␢ அவரது புகழ் எப்பொழுதும்␢ என் நாவில் ஒலிக்கும்.⁾ 2⁽நான் ஆண்டவரைப் பற்றிப்␢ பெருமையாகப் பேசுவேன்;␢ எளியோர் இதைக் கேட்டு அக்களிப்பர்.⁾ 3⁽என்னுடன் ஆண்டவரை␢ பெருமைப்படுத்துங்கள்;␢ அவரது பெயரை ஒருமிக்க␢ மேன்மைப்படுத்துவோம்.⁾ 4⁽துணைவேண்டி நான் ஆண்டவரை␢ மன்றாடினேன்; அவர் எனக்கு␢ மறுமொழி பகர்ந்தார்;␢ எல்லா வகையான அச்சத்தினின்றும்␢ அவர் என்னை விடுவித்தார்.⁾ 5⁽அவரை நோக்கிப் பார்த்தோர்␢ மகிழ்ச்சியால் மிளிர்ந்தனர்;␢ அவர்கள் முகம்␢ அவமானத்திற்கு உள்ளாகவில்லை.⁾ 6⁽இந்த ஏழை கூவியழைத்தான்;␢ ஆண்டவர் அவனுக்குச் செவிசாய்த்தார்;␢ அவர் எல்லா நெருக்கடியினின்றும்␢ அவனை விடுவித்துக் காத்தார்.⁾ 7⁽ஆண்டவருக்கு அஞ்சி வாழ்வோரை␢ அவர்தம் தூதர் சூழ்ந்துநின்று காத்திடுவர்.⁾ 8⁽ஆண்டவர் எத்துணை இனியவர் என்று␢ சுவைத்துப் பாருங்கள்;␢ அவரிடம் அடைக்கலம் புகுவோர்␢ பேறுபெற்றோர்.⁾ 9⁽ஆண்டவரின் தூயோரே,␢ அவருக்கு அஞ்சுங்கள்;␢ அவருக்கு அஞ்சுவோர்க்கு␢ எக்குறையும் இராது.⁾ 10⁽சிங்கக் குட்டிகள் உணவின்றிப்␢ பட்டினி இருக்க நேரிட்டாலும்,␢ ஆண்டவரை நாடுவோர்க்கு␢ நன்மை ஏதும் குறையாது.⁾ 11⁽வாரீர் பிள்ளைகளே!␢ நான் சொல்வதைக் கேளீர்!␢ ஆண்டவருக்கு அஞ்சுவதைப்பற்றி␢ உங்களுக்குக் கற்பிப்பேன்.⁾ 12⁽வாழ்க்கையில் இன்பம் காண விருப்பமா?␢ வாழ்வின் வளத்தைத் துய்க்குமாறு␢ நெடுநாள் வாழ நாட்டமா?⁾ 13⁽அப்படியெனில், தீச்சொல்லினின்று␢ உன் நாவைக் காத்திடு;␢ வஞ்சக மொழியை␢ உன் வாயைவிட்டு விலக்கிடு!⁾ 14⁽தீமையைவிட்டு விலகு;␢ நன்மையே செய்; நல்வாழ்வை நாடு;␢ அதை அடைவதிலேயே கருத்தாயிரு.⁾ 15⁽ஆண்டவர் கண்கள்␢ நீதிமான்களை நோக்குகின்றன;␢ அவர் செவிகள்␢ அவர்களது மன்றாட்டைக் கேட்கின்றன.⁾ 16⁽ஆண்டவரின் முகமோ␢ தீமைசெய்வோர்க்கு எதிராக இருக்கின்றது;␢ அவர், அவர்களின் நினைவே␢ உலகில் அற்றுப்போகச் செய்வார்.⁾ 17⁽நீதிமான்கள் மன்றாடும்போது,␢ ஆண்டவர் செவிசாய்க்கின்றார்;␢ அவர்களை அனைத்து␢ இடுக்கண்ணினின்றும் விடுவிக்கின்றார்.⁾ 18⁽உடைந்த உள்ளத்தார்க்கு அருகில்␢ ஆண்டவர் இருக்கின்றார்;␢ நைந்த நெஞ்சத்தாரை␢ அவர் காப்பாற்றுகின்றார்.⁾ 19⁽நேர்மையாளருக்கு நேரிடும் தீங்குகள் பல;␢ அவை அனைத்தினின்றும்␢ ஆண்டவர் அவர்களை விடுவிக்கின்றார்.⁾ 20⁽அவர்களின் எலும்புகளை எல்லாம்␢ அவர் பாதுகாக்கின்றார்;␢ அவற்றுள் ஒன்றும் முறிபடாது.⁾ 21⁽தீயோரைத் தீவினையே சாகடிக்கும்;␢ நேர்மையாளரை வெறுப்போர்␢ தண்டனை பெறுவர்.⁾ 22⁽ஆண்டவர் தம் ஊழியரின் உயிரை␢ மீட்கின்றார்; அவரிடம் அடைக்கலம்␢ புகும் எவரும் தண்டனை அடையார்.⁾