திருப்பாடல்கள் 44

முந்திய அடுத்த
1⁽கடவுளே, எங்கள் காதுகளால்␢ நாங்களே கேட்டிருக்கின்றோம்;␢ எங்கள் மூதாதையர்␢ அவர்கள் காலத்திலும் அதற்கு முன்பும்␢ நீர் என்னென்ன செய்துள்ளீர் என்று␢ எங்களுக்கு எடுத்துரைத்தனர்.⁾ 2⁽உமது கையால்␢ வேற்றினத்தாரை விரட்டியடித்து,␢ எந்தையரை நிலைநாட்டினீர்;␢ மக்களினங்களை நொறுக்கிவிட்டு␢ எந்தையரைச் செழிக்கச் செய்தீர்.⁾ 3⁽அவர்கள் தங்கள் வாளால்␢ நாட்டை உடைமையாக்கிக்␢ கொள்ளவில்லை;␢ அவர்கள் தங்கள்␢ புயத்தால் வெற்றி பெறவில்லை.␢ நீர் அவர்களில் மகிழ்ச்சியுற்றதால்␢ உமது வலக்கையும் உமது புயமும்␢ உமது முகத்தின் ஒளியுமே␢ அவர்களுக்கு வெற்றியளித்தன.⁾ 4⁽நீரே என் அரசர்; நீரே என் கடவுள்!␢ யாக்கோபுக்கு வெற்றி அளிப்பவர் நீரே.⁾ 5⁽எங்கள் பகைவர்களை␢ உமது துணையால் தாக்கி வீழ்த்துவோம்;␢ எங்களுக்கு எதிராய் எழுந்தோரை␢ உமது பெயரால் மிதித்துப் போடுவோம்.⁾ 6⁽என் வில்லை நான் நம்புவதில்லை;␢ என் வாள் என்னைக் காப்பாற்றுவதுமில்லை.⁾ 7⁽நீரே பகைவரிடமிருந்து␢ எங்களைக் காப்பாற்றினீர்;␢ எங்களை வெறுப்போரை␢ வெட்கமுறச் செய்தீர்.⁾ 8⁽எந்நாளும் கடவுளாம் உம்மை நினைத்துப்␢ பெருமை கொண்டோம்.␢ என்றென்றும் உமது பெயருக்கு␢ நன்றி செலுத்தி வந்தோம். (சேலா)⁾ 9⁽ஆயினும், இப்போது நீர் எங்களை␢ ஒதுக்கித் தள்ளிவிட்டீர்;␢ இழிவுபடுத்திவிட்டீர்.␢ எங்கள் படைகளுடன்␢ நீர் செல்லாதிருக்கின்றீர்.⁾ 10⁽எங்கள் பகைவருக்கு நாங்கள்␢ புறங்காட்டி ஓடும்படிச் செய்தீர்.␢ எங்களைப் பகைப்போர்␢ எங்களைக் கொள்ளையிட்டனர்.⁾ 11⁽உணவுக்காக வெட்டப்படும்␢ ஆடுகளைப்போல்␢ எங்களை ஆக்கிவிட்டீர்.␢ வேற்றினத்தாரிடையே எங்களைச் § சிதறியோடச் செய்தீர்.⁾ 12⁽நீர் உம் மக்களை␢ அற்ப விலைக்கு விற்றுவிட்டீர்;␢ அவர்கள் மதிப்பை மிகவும் குறைத்துவிட்டீர்.⁾ 13⁽எங்களை அடுத்து வாழ்வோரின்␢ பழிப்புக்கு எங்களை ஆளாக்கினீர்;␢ எங்கள் சுற்றுப்புறத்தாரின்␢ ஏளனத்துக்கும் இகழ்ச்சிக்கும்␢ எங்களை உள்ளாக்கினீர்.⁾ 14⁽வேற்றினத்தாரிடையே எங்களை␢ ஒரு பழிச்சொல்லாக்கினீர்;␢ ஏனைய மக்கள் எங்களைப் பார்த்துத்␢ தலையசைத்து நகைக்கின்றனர்.⁾ 15⁽எனக்குள்ள மானக்கேடு நாள் முழுதும்␢ என் கண்முன் நிற்கின்றது;␢ அவமானம் என் முகத்தை மூடியுள்ளது.⁾ 16⁽என்னைப் பழித்துத் தூற்றுவோரின்␢ குரலை நான் கேட்கும்போதும்,␢ என் எதிரிகளையும், என்னைப்␢ பழிவாங்கத் தேடுவோரையும்␢ நான் பார்க்கும்போதும்␢ வெட்கிப்போகின்றேன்.⁾ 17⁽நாங்கள் உம்மை மறக்காவிடினும்,␢ உமது உடன்படிக்கையை மீறாவிடினும்,␢ இவையெல்லாம் எங்களுக்கு நேரிட்டன.⁾ 18⁽எங்கள் உள்ளம் பின்வாங்கவில்லை;␢ எங்கள் காலடிகள்␢ உம் வழியினின்று பிறழவில்லை.⁾ 19⁽ஆயினும், நீர் எங்களை␢ கொடிய பாம்புகள் உள்ள இடத்தில் § நொறுங்கும்படி விட்டுவிட்டீர்;␢ சாவின் இருள் எங்களைக்␢ கவ்விக்கொண்டது.⁾ 20⁽நாங்கள் எங்கள் கடவுளின் பெயரை␢ மறந்துவிட்டு, வேற்றுத் தெய்வத்தைக்␢ கைகூப்பி வணங்கியிருந்தோமானால்,⁾ 21⁽கடவுளாம் நீர் அதைக்␢ கண்டுபிடித்திருப்பீர் அல்லவா?␢ ஏனெனில், உள்ளத்தில்␢ புதைந்திருப்பவற்றை நீர் அறிகின்றீர்.⁾ 22⁽உம் பொருட்டு நாள்தோறும்␢ கொல்லப்படுகின்றோம்;␢ வெட்டுவதற்கென நிறுத்தப்படும்␢ ஆடுகளெனக் கருதப்படுகின்றோம்.⁾ 23⁽என் தலைவா! கிளர்ந்தெழும்,␢ ஏன் உறங்குகின்றீர்?␢ விழித்தெழும்; எங்களை ஒருபோதும்␢ ஒதுக்கித் தள்ளிவிடாதேயும்.⁾ 24⁽நீர் உமது முகத்தை␢ ஏன் மறைத்துக் கொள்கின்றீர்?␢ எங்கள் சிறுமையையும் துன்பத்தையும்␢ ஏன் மறந்து விடுகின்றீர்?⁾ 25⁽நாங்கள் தரைமட்டும் தாழ்ந்துவிட்டோம்;␢ எங்கள் உடல் மண்ணோடு␢ ஒட்டிக்கொண்டுள்ளது.⁾ 26⁽எழுந்து வாரும்;␢ எங்களுக்குத் துணை புரியும்;␢ உமது பேரன்பை முன்னிட்டு␢ எங்களை மீட்டருளும்.⁾