திருப்பாடல்கள் 87

முந்திய அடுத்த
1⁽நகரின் அடித்தளம்␢ திருமலைகளின்மீது␢ அமைந்துள்ளது.⁾ 2⁽யாக்கோபின் உறைவிடங்கள்␢ அனைத்தையும்விட␢ ஆண்டவர் சீயோன் நகர வாயில்களை␢ விரும்புகின்றார்.⁾ 3⁽கடவுளின் நகரே! உன்னைப்பற்றி␢ மேன்மையானவை␢ பேசப்படுகின்றன. (சேலா)⁾ 4⁽எகிப்தையும் பாபிலோனையும்␢ என்னை அறிந்தவைகளாகக் கொள்வேன்;␢ பெலிஸ்தியர், தீர் மற்றும் எத்தியோப்பியா␢ நாட்டினரைக் குறித்து,␢ ‛இவர்கள் இங்கேயே␢ பிறந்தவர்கள்’ என்று கூறப்படும்.⁾ 5⁽‛இங்கேதான் எல்லாரும் பிறந்தனர்;␢ உன்னதர்தாமே அதை␢ நிலைநாட்டியுள்ளார்!’ என்று␢ சீயோனைப்பற்றிச் சொல்லப்படும்.⁾ 6⁽மக்களினங்களின் பெயர்களைப்␢ பதிவு செய்யும்போது,␢ ‛இவர் இங்கேதான் பிறந்தார்’ என␢ ஆண்டவர் எழுதுவார். (சேலா)⁾ 7⁽ஆடல் வல்லாருடன்␢ பாடுவோரும் சேர்ந்து␢ ‛எங்கள் நலன்களின் ஊற்று␢ உன்னிடமே உள்ளது;␢ எல்லாரின் உறைவிடமும்␢ உன்னிடமே உள்ளது’ என்பர்.⁾