1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
46
47
48
49
50
51
52
53
54
55
56
57
58
59
60
61
62
63
64
65
66
67
68
69
70
71
72
73
74
75
76
77
78
79
80
81
82
83
84
85
86
87
88
89
90
91
92
93
94
95
96
97
98
99
100
101
102
103
104
105
106
107
108
109
110
111
112
113
114
115
116
117
118
119
120
121
122
123
124
125
126
127
128
129
130
131
132
133
134
135
136
137
138
139
140
141
142
143
144
145
146
147
148
149
150
1⁽அவர் உரைத்தது:␢ என் ஆற்றலாகிய ஆண்டவரே!␢ உம்மிடம் நான் அன்புகூர்கின்றேன்.⁾
2⁽ஆண்டவர் என் கற்பாறை;␢ என் கோட்டை; என் மீட்பர்; என் இறைவன்;␢ நான் புகலிடம் தேடும் மலை அவரே;␢ என் கேடயம், எனக்கு மீட்பளிக்கும்␢ வல்லமை, என் அரண்.⁾
3⁽போற்றற்குரிய ஆண்டவரை நோக்கி␢ நான் மன்றாடினேன்;␢ என் எதிரிகளிடமிருந்து நான்␢ மீட்கப்பட்டேன்.⁾
4⁽சாவின் கயிறுகள் என்னை இறுக்கின;␢ அழிவின் சுழல்கள் என்னை மூழ்கடித்தன.⁾
5⁽பாதாளக் கயிறுகள் என்னைச்␢ சுற்றி இறுக்கின;␢ சாவின் கண்ணிகள் என்னைச்␢ சிக்க வைத்தன.⁾
6⁽என் நெருக்கடி வேளையில்␢ நான் ஆண்டவரிடம் மன்றாடினேன்;␢ என் கடவுளை நோக்கிக் கதறினேன்;␢ தமது கோவிலினின்று␢ அவர் என் குரலைக் கேட்டார்;␢ என் கதறல் அவர் செவிகளுக்கு எட்டியது.⁾
7⁽அப்பொழுது, மண்ணுலகம்␢ அசைந்து அதிர்ந்தது;␢ மலைகளின் அடித்தளங்கள் கிடுகிடுத்தன;␢ அவர்தம் கடுஞ்சினத்தால்␢ அவை நடுநடுங்கின.⁾
8⁽அவரது நாசியினின்று புகை கிளம்பிற்று;␢ அவரது வாயினின்று␢ எரித்தழிக்கும் தீ மூண்டது;␢ அவரிடமிருந்து நெருப்புக்கனல் § வெளிப்பட்டது.⁾
9⁽வானைத் தாழ்த்தி அவர் கீழிறங்கினார்;␢ கார் முகில் அவரது காலடியில் இருந்தது.⁾
10⁽கெருபுமீது அவர் ஏறிப் பறந்து வந்தார்;␢ காற்றை இறக்கைகளாகக் கொண்டு␢ விரைந்து வந்தார்.⁾
11⁽காரிருளைத் தமக்கு அவர்␢ மூடுதிரை ஆக்கிக்கொண்டார்;␢ நீர்கொண்ட முகிலைத் தமக்குக் கூடாரம் ஆக்கிக்கொண்டார்.⁾
12⁽அவர்தம் திருமுன்னின் பேரொளியில்,␢ மேகங்கள் கல் மழையையும்␢ நெருப்புக் கனலையும் பொழிந்தன.⁾
13⁽ஆண்டவர் வானங்களில்␢ இடியென முழங்கினார்;␢ உன்னதர் தம் குரலை அதிரச் செய்தார்.␢ கல் மழையையும் நெருப்புக் கனலையும் § பொழிந்தார்.⁾
14⁽தம் அம்புகளை எய்து␢ அவர் அவர்களைச் சிதறடித்தார்;␢ பெரும் மின்னல்களைத் தெறித்து␢ அவர்களைக் கலங்கடித்தார்.⁾
15⁽ஆண்டவரே, உமது கடிந்துரையாலும்␢ உமது மூச்சுக்காற்றின் வலிமையாலும்␢ நீர்த்திரளின் அடிப்பரப்பு தென்பட்டது;␢ நிலவுலகின் அடித்தளம் காணப்பட்டது.⁾
16⁽உயரத்தினின்று அவர் என்னை␢ எட்டிப் பிடித்துக் கொண்டார்;␢ வெள்ளப்பெருக்கினின்று␢ என்னைக் காப்பாற்றினார்.⁾
17⁽என் வலிமைமிகு எதிரியிடமிருந்து␢ அவர் என்னை விடுவித்தார்;␢ என்னைவிட வலிமைமிகு பகைவரிடமிருந்து␢ என்னைப் பாதுகாத்தார்;⁾
18⁽எனக்கு இடுக்கண் வந்த நாளில்␢ அவர்கள் என்னை எதிர்த்தார்கள்;␢ ஆண்டவரோ எனக்கு␢ ஊன்றுகோலாய் இருந்தார்.⁾
19⁽நெருக்கடியற்ற இடத்திற்கு␢ அவர் என்னைக் கொணர்ந்தார்;␢ நான் அவர் மனத்திற்கு␢ உகந்தவனாய் இருந்ததால்,␢ அவர் என்னை விடுவித்தார்.⁾
20⁽ஆண்டவர் எனது நேர்மைக்கு␢ உரிய பயனை எனக்களித்தார்;␢ என் மாசற்ற செயலுக்கு ஏற்ப␢ கைம்மாறு செய்தார்.⁾
21⁽ஏனெனில், நான் ஆண்டவர் காட்டிய␢ நெறியைக் கடைப்பிடித்தேன்;␢ பொல்லாங்கு செய்து␢ என் கடவுளை விட்டு அகலவில்லை.⁾
22⁽அவர்தம் நீதிநெறிகளை எல்லாம்␢ என் கண்முன் வைத்திருந்தேன்;␢ அவர்தம் விதிமுறைகளை நான்␢ ஒதுக்கித் தள்ளவில்லை.⁾
23⁽அவர் முன்னிலையில்␢ நான் மாசற்றவனாய் இருந்தேன்;␢ தீங்கு செய்யாவண்ணம்␢ என்னைக் காத்துக் கொண்டேன்.⁾
24⁽ஆண்டவர், என் நேர்மைக்கு␢ உரிய பயனை அளித்தார்;␢ அவர்தம் பார்வையில்␢ நான் குற்றம் அற்றவனாய் இருந்தேன்.⁾
25⁽ஆண்டவரே, மாறா அன்பர்க்கு␢ மாறா அன்பராகவும்␢ மாசற்றோர்க்கு மாசற்றவராகவும்␢ நீர் விளங்குவீர்.⁾
26⁽தூயோருக்குத் தூயவராகவும்␢ வஞ்சகர்க்கு விவேகியாகவும்␢ உம்மை நீர் காட்டுகின்றீர்.⁾
27⁽எளியோருக்கு நீர் மீட்பளிக்கின்றீர்;␢ செருக்குற்றோரை ஏளனத்துடன் § நீர் பார்க்கின்றீர்.⁾
28⁽ஆண்டவரே, நீர் என் விளக்குக்கு␢ ஒளியேற்றுகின்றீர்.␢ என் கடவுளே, நீர் என் இருளை␢ ஒளிமயமாக்குகின்றீர்.⁾
29⁽உம் துணையுடன் நான்␢ எப்படையையும் நசுக்குவேன்;␢ என் கடவுளின் துணையால்␢ எம்மதிலையும் தாண்டுவேன்.⁾
30⁽இந்த இறைவனின் வழி நிறைவானது;␢ ஆண்டவரின் வாக்கு நம்பத்தக்கது;␢ அவரிடம் அடைக்கலம் புகும் அனைவர்க்கும்␢ அவரே கேடயமாய் இருக்கின்றார்.⁾
31⁽ஏனெனில், ஆண்டவரைத் தவிர␢ வேறு கடவுள் யார்?␢ நம் கடவுளைத் தவிர நமக்கு␢ வேறு கற்பாறை ஏது?⁾
32⁽வலிமையை அரைக்கச்சையாக␢ அளித்த இறைவன் அவரே;␢ என் வழியைப் பாதுகாப்பானதாய்ச்␢ செய்தவரும் அவரே.⁾
33⁽அவர் என் கால்களை மான்களின்␢ கால்களைப் போல் ஆக்குகின்றார்;␢ உயர்ந்த இடத்தில்␢ என்னை நிலைநிறுத்துகின்றார்.⁾
34⁽போருக்கு என்னை அவர் பழக்குகின்றார்;␢ எனவே, வெண்கல வில்லையும் § என் புயங்கள் வளைக்கும்.⁾
35⁽ஆண்டவரே, பாதுகாக்கும் உம் கேடயத்தை␢ நீர் எனக்கு வழங்கினீர்;␢ உமது வலக்கரத்தால்␢ என்னைத் தாங்கிக் கொண்டீர்;␢ உமது துணையால்␢ என்னைப் பெருமைப்படுத்தினீர்.⁾
36⁽நான் நடக்கும் வழியை அகலமாக்கினீர்;␢ என் கால்கள் தடுமாறவில்லை.⁾
37⁽என் எதிரிகளைத் துரத்திச்சென்று␢ நான் அவர்களைப் பிடித்தேன்;␢ அவர்களை அழித்தொழிக்கும் வரையில்␢ திரும்பவில்லை.⁾
38⁽அவர்கள் எழுந்திருக்க முடியாதபடி␢ அவர்களை நான் வெட்டித்தள்ளினேன்;␢ அவர்கள் என் காலடியில் வீழ்ந்தார்கள்.⁾
39⁽போரிடும் ஆற்றலை நீர் எனக்கு␢ அரைக்கச்சையாக அளித்தீர்;␢ என்னை எதிர்த்தவர்களை␢ எனக்கு அடிபணியச் செய்தீர்.⁾
40⁽என் எதிரிகளைப் புறமுதுகிடச் செய்தீர்;␢ என்னை வெறுத்தோரை␢ நான் அழித்துவிட்டேன்.⁾
41⁽உதவி வேண்டி அவர்கள் கதறினார்கள்;␢ ஆனால், அவர்களுக்கு உதவுவார்␢ யாருமில்லை. அவர்கள்␢ ஆண்டவரை நோக்கி மன்றாடினார்கள்;␢ ஆனால், அவர்களுக்கு␢ அவர் பதிலளிக்கவில்லை.⁾
42⁽எனவே, நான் அவர்களை நொறுக்கிக்␢ காற்றடித்துச் செல்லும் புழுதிபோல்␢ ஆக்கினேன்; தெருச் சேறென␢ அவர்களைத் தூர எறிந்து விட்டேன்.⁾
43⁽என் மக்களின் கலகத்தினின்று␢ என்னை விடுவித்தீர்;␢ பிற இனங்களுக்கு␢ என்னைத் தலைவன் ஆக்கினீர்;␢ நான் முன்பின் அறியாத மக்கள்␢ எனக்குப் பணிவிடை செய்தனர்.⁾
44⁽அவர்கள் என்னைப்பற்றிக்␢ கேள்விப்பட்டவுடன்␢ எனக்குப் பணிந்தனர்;␢ வேற்று நாட்டவர் என்னிடம்␢ கூனிக் குறுகி வந்தனர்.⁾
45⁽வேற்று நாட்டவர் உள்ளம் தளர்ந்தனர்;␢ தம் அரண்களிலிருந்து␢ நடுங்கிக் கொண்டு வெளியே வந்தனர்.⁾
46⁽ஆண்டவர் உண்மையாகவே வாழ்கின்றார்!␢ என் கற்பாறையாம் அவர் § போற்றப் பெறுவாராக!␢ என் மீட்பராம் கடவுள் மாட்சியுறுவாராக!⁾
47⁽எனக்காகப் பழிவாங்கும் இறைவன் அவர்;␢ மக்களினங்களை எனக்குக் § கீழ்ப்படுத்தியவரும் அவரே!⁾
48⁽என் பகைவரிடமிருந்து␢ என்னை விடுவித்தவரும் அவரே!␢ ஆண்டவரே! என் எதிரிகளுக்கு மேலாக␢ என்னை உயர்த்தினீர்!␢ என்னைக் கொடுமைப்படுத்தியவரிடமிருந்து␢ நீர் என்னைக் காத்தீர்!⁾
49⁽ஆகவே, பிற இனத்தாரிடையே␢ உம்மைப் போற்றுவேன்;␢ உம் பெயருக்குப் புகழ்மாலை சாற்றுவேன்.⁾
50⁽தாம் ஏற்படுத்திய அரசருக்கு␢ மாபெரும் வெற்றியை அளிப்பவர் அவர்;␢ தாம் திருப்பொழிவு செய்த தாவீதுக்கும்␢ அவர்தம் மரபினருக்கும்␢ என்றென்றும் பேரன்பு காட்டுபவரும் அவரே.⁾